ஹே! பி.ஜே.பி. மேல தமிழர்களுக்கு இவ்ளோ கோபமா? மிரண்ட ரஜினி, தள்ளிப்போகும் அரசியல்!

By vinoth kumarFirst Published Dec 13, 2018, 3:08 PM IST
Highlights

ஹே! என்ன இந்தளவுக்கு பி.ஜே.பி.யோட வீழ்ச்சியை கொண்டாடுது தமிழகம். தமிழக எதிர்கட்சிகள்தான் கொண்டாடுறாங்கன்னா, சில இடங்கள்ள அ.தி.மு.க. ஆளுங்களுமே இந்த ரிசல்டை ரசிச்சிருக்காங்களே. அப்போ மொத்த தமிழ்நாடும் தாமரைக்கு எதிராதானே நிற்குது!?” என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி இளவரசன், ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தாராம்.

கட்சி துவங்க இருக்கும் ரஜினிக்கு முதுகெழும்பாக பி.ஜே.பி. இருக்கிறதோ இல்லையோ! ஆனால் நிச்சயம் அவரது மூளையில் ஒரு அங்கமாக அக்கட்சி இருக்கிறது என்பது நிதர்சனம். தன்னுடையது ’ஆன்மிக அரசியல் ‘ என்று அறிவித்திருக்கும் ரஜினி நிச்சயமாக கூட்டணி கைகோர்ப்பு உள்ளிட்ட இத்யாதிகளை பி.ஜே.பி.யுடன் தான் புழங்குவார் என்பதும் அரசியல் விமர்சகர்கள் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டுகின்ற விஷயம். 

நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று ரஜினி அறிவித்து இதோ இன்னும் சில நாட்களில் ஒருவருடம் ஆகப்போகிறது. இந்த ஒரு வருடத்திற்குள் முழு வீச்சில் கட்சி துவக்கும் பணிகளுக்குள் இறங்கிவிட்டாலும் கூட படிப்படியாக பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்துதான் வைத்திருக்கிறார் அவர். குறிப்பாக,  தன் ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றியதில் துவங்கி மாவட்டம் முழுக்க நிர்வாகிகள் நியமிப்பு, களையெடுப்பு, புது நியமனம், சண்டை, சச்சரவுகள் என்று பக்காவான அரசியல் இயக்கம் உதயமாவதற்கான எல்லா லட்சணங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது ரஜினியின் அமைப்பு. 

ரஜினி முதலிலேயே ‘வரும் நாடாளுமன்ற தேர்தல் நம் இலக்கல்ல. அடுத்த சட்டமன்ற தேர்தல்தான் நம் இலக்கு.’ என்று கூறினார். ஆனால், பி.ஜே.பி.யோ  கடந்த சில மாதங்களாக ரஜினியை அநியாயத்துக்கு நெருக்க துவங்கியுள்ளது. அமித்ஷாவும், மோடியும் கூட்டணிக்காக பெரிதும் எதிர்பார்த்த அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து கொண்டே வருவதாக உளவுத்துறை  ‘ஹெவி நோட்’ ஒன்றை வைத்துவிட்டது. 

இதனால் இருவரும் தமிழகத்தில் தங்கள் கட்சியின் எழுச்சிக்காக பெரிதும் நம்புவது ரஜினியை மட்டுமே! நாடாளுமன்ற தேர்தலுக்குள் அவரை கட்சியை துவக்க வைத்து, கூட்டணி சேர்ந்துவிட வேண்டுமென்று அதிகம் ஆசைப்படுகிறார்கள். நெடிய யோசனைக்குப் பின் ரஜினியும் கட்சி துவக்க கிட்டத்தட்ட தலையாட்டிவிட்டார் என்றே தகவல். 

இந்நிலையில்தான் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை ரஜினி கவனித்து, வடக்கிலேயே பி.ஜே.பி. சந்தித்திருக்கும் சரிவுகளை கண்டு அதிர்ந்திருக்கிறார். அதைவிட இந்த தேர்தல் முடிவுகளை வரவேற்றும், தோற்றுப் போன பி.ஜே.பி.யை மிக மிக மிக கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும், நய்யாண்டி பேசியும், அர்ச்சித்தும், ஆரவாரம் செய்தும், ‘வடக்கேயே விழுந்தாச்சு, தமிழ்நாட்டிலே எங்கே தாமரை மலரும்?’ என்று திட்டியும் வரும் சமூக வலைதள பதிவுகளையும் முழுமையா கவனித்துவிட்டு பெரிய ஷாக்கிற்கு ஆளாகியுள்ளார் ரஜினி. 

ஹே! என்ன இந்தளவுக்கு பி.ஜே.பி.யோட வீழ்ச்சியை கொண்டாடுது தமிழகம். தமிழக எதிர்கட்சிகள்தான் கொண்டாடுறாங்கன்னா, சில இடங்கள்ள அ.தி.மு.க. ஆளுங்களுமே இந்த ரிசல்டை ரசிச்சிருக்காங்களே. அப்போ மொத்த தமிழ்நாடும் தாமரைக்கு எதிராதானே நிற்குது!?” என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி இளவரசன், ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தாராம். அரசியல் கட்சியினர், இளைஞர்கள், நடுத்தர மக்கள், சினிமாத்துறையினர் என எல்லா தளங்களிலுமே அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கும் பி.ஜே.பி.க்காக அவசரம் அவசரமாய் கட்சியை துவக்கி, கூட்டணி வேறு வைக்கணுமா? இது தப்பான மூவ் ஆச்சே! என்று கன்னத்தை தடவி, யோசித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்! என்கிறார்கள். தாமரை இம்பூட்டு சோகத்தையும் எப்பூடித்தான் தாங்குதோ!

click me!