அதிசயம், அற்புதம் இனி எப்போதும் நடக்காது.? ஏக்கத்தில் இளமையை தொலைத்த ரசிகர்களுக்கு மொத்தமாக குழிவெட்டிய ரஜினி

By Thiraviaraj RMFirst Published Sep 12, 2020, 1:05 PM IST
Highlights

கடந்த 32 ஆண்டுகளாக அரசியலுக்கு ரஜினி வருவாரா... மாட்டாரா..? என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு இனி எப்போதும் இல்லை என்கிற வகையில் மொத்தமாக ஏமாற்றம் தந்துள்ளார் ரஜினிகாந்த்.
 

கடந்த 32 ஆண்டுகளாக அரசியலுக்கு ரஜினி வருவாரா... மாட்டாரா..? என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு இனி எப்போதும் இல்லை என்கிற வகையில் மொத்தமாக ஏமாற்றம் தந்துள்ளார் ரஜினிகாந்த்.

 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. போருக்கு தயாராகுங்கள் என்றும், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் கொக்கரித்தார். எனவே நிச்சயம் 2021 தேர்தலுக்குள் அரசியல் கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களிடையே அரசியல் புரட்சி வெடிக்கட்டும். பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி கொஞ்சம் ஆட்டம் காட்டினார். இதனால் அவர் அரசியல் கட்சி தொடங்குவது மீண்டும் கேள்விக்குறியானது.

இதனிடையே, கொரோனா வந்துவிட்டதால், ரஜினி அரசியல் வருகை பெரும் சந்தேகத்துக்கு ஆட்படுத்தியது. ஆனாலும், ரஜினி நவம்பரில் அரசியல் கட்சி தொடங்குவார். மதுரையில் மாநாடு நடத்த உள்ளார் என்று யூகங்கள் கிளம்பின. ஆனால், ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவலை ஒரு சிலர் பரப்புவதாகவும், இதனால் கோபமடைந்த ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனாலும், ரஜினி கட்சி தொடங்குவதில் உறுதியாக இருப்பதாவும், மன்றங்களை வலுப்படுத்த நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கு கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர் நிர்வாகிகள்.

இந்த தகவல் வெளியான உடன், ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவரது மன்ற நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதாவது, மாற்றத்தை சிந்திக்கும் மக்களும்.. மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால், அரசியல் மாற்றம்..!! ஆட்சி மாற்றம் எப்பவுமே இல்ல” என்ற வாசகங்கள் பெரும்பாலும் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழலில், தலைமையில் இருந்து உத்தரவு வரும், இதுபோன்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி, உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யாரும் தன்னிச்சையாக போஸ்டர் ஒட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போஸ்டர் ஒட்டக் கூடாது என்ற திடீர் உத்தரவு ரஜினி அரசியல் வருகையின் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போலவே, தற்போது கொரோனாவை காரணம் காட்டி ரஜினி எடுத்த முடிவு, அரசியல் வருகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆம்.. சினிமா படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பும், ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவில்லையாம்.. ரஜினியை தவிர மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரொனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகு 2021 ஜனவரியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிக்கு ஏற்கனவே ஒரு சில அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அவர் கொரோனா காலத்தில் வெளியே செல்லக் கூடாது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. இதே போல் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்தினரும் ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வதையோ, அரசியல் கட்சி தொடங்குவதை விரும்பவில்லை. எனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாத ரஜினி, நவம்பர் மாதம் கட்சி தொடங்குவது சந்தேகம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசிகள் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

இந்நிலையில் ரஜினி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வருவதற்குள், தேர்தலே நெருங்குவிடும்.. எனவே நவம்பரில் அரசியல் கட்சி என்ற தகவலும் மீண்டும் கேள்விக் குறியாகி உள்ளது. எனினும் ரஜினி கூறியது போலவே அதிசயம், அற்புதம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!