வெறுங்காலில் எடப்பாடி, ஷூபோட்ட ஸ்டாலின்.!! ரஜினி அந்த கடலில் குதிக்கட்டும், அல்லு தெறிக்கவிட்ட ஜெயக்குமார்..!

Published : Mar 14, 2020, 02:26 PM IST
வெறுங்காலில் எடப்பாடி,  ஷூபோட்ட ஸ்டாலின்.!! ரஜினி அந்த கடலில் குதிக்கட்டும், அல்லு தெறிக்கவிட்ட ஜெயக்குமார்..!

சுருக்கம்

 ரஜினியை பொறுத்தவரை அதிமுகவைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை . அதனால்  எதையும் நான் கூற முடியாது .  ரஜினி தன் கொள்கை லட்சியத்தை கூறுவதில் தவறில்லை 

அரசியலில் இல்லாத ரஜினி குறித்து ஏன் கருத்து சொல்ல வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் . அவரின்  கொள்கை லட்சியத்தை அவர் கூறுவதில் தவறில்லை என்றும் ,  ரஜினி  குறித்து கருத்து கூறியுள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்.  ஜிஎஸ்டி 39வது கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி விரைந்தார் ,  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஜிஎஸ்டி 39 வது கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன் .  போலியான ரசிதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம் . 

 

இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார் ,  மேலும் பேசிய அவர் 292 சரக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது 42பொருட்களில் சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது .  24 பொருட்கள் மீதான வரிக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் .  மேலும் நம் மாநிலத்தின் சார்பாக 62 சரக்குகளின் சேவை வரி குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .   மக்களையும் மனிதர்களையும் பாதிக்கும் எந்த வரியும் விதிக்கப்பட மாட்டாது என்றார் .  ரஜினி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் ,  அரசியல் என்பது ஒரு சமுத்திரம் ,  முதலில் ரஜினி அதில் குதிக்கட்டும் ,  அதன்பிறகு அவரைப் பற்றி கருத்து சொல்கிறோம் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,   அரசியலில் இல்லாத ரஜினி பற்றி ஏன் கருத்து சொல்லவேண்டும் .  அரசியலில்  இல்லாத ரஜினியும் கமலும் எப்படி இணைய முடியும் .  அது  ஒரு யூகம் .   மக்கள் செல்வாக்குப் பெற்ற மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மக்களுக்காக அரசுதான் அதிமுக . ரஜினியை பொறுத்தவரை அதிமுகவைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை . அதனால் எதையும் நான் கூற முடியாது .  ரஜினி தன் கொள்கை லட்சியத்தை கூறுவதில் தவறில்லை .  மு க ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல சமூக வலைத்தளத்தில் வெளியாகும்  புகைப்படம் ஒரு கிராபிக்ஸ்,  சிவப்பு கம்பளத்தில் ஷூபோட்டு  நடப்பவர் தான் ஸ்டாலின் வெறும் காலுடன் நடந்து செல்பவர்தான் தமிழக முதலமைச்சர் என்றார்.  
 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்