விபத்தில் சிக்கிய திமுக பிரமுகரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!!

Published : Feb 08, 2019, 10:24 AM IST
விபத்தில் சிக்கிய திமுக பிரமுகரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!!

சுருக்கம்

விபத்தில் சிக்கி ரோட்டில் அடிபட்டுக் கிடந்த  திமுக பிரமுகரை , அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று  இரவு அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பி சாலை வழியாக வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலையில்  விபத்தில் சிக்கி ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். இதைக்கண்ட அமைச்சர்கள், உடனே தனது  காரை நிறுத்தி இறங்கியுள்ளனர். விபத்தில் சிக்கி வலியால் துடித்துடித்தபடி கிடந்த  அவரை  அமைச்சர்கள் டாக்டர் C விஜயபாஸ்கர் மற்றும் MRவிஜயபாஸ்கர் முதலுதவிக்குப் பின் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். (அமைச்சர்கள் கீழே இறங்கிப் பார்த்ததும் அடிபட்டு கிடந்தது திமுக பிரமுகர்)  

அவரை அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் , மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவித்து, உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அந்த திமுக பிரமுகர் தற்போது நல்ல நிலையில் உள்ளார்.  

அதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். என்னதான் எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகரான இருந்தாலும் அடிபட்டு கிடந்தவர் யார் என்று கூட பார்க்காமல் அமைச்சர்கள் செய்த இந்த காரியத்தை பொதுமக்களும் , திமுகவினருக்கு கூட பாராட்டுகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?