’துரோகி பன்னீர் இனியும் பதவியில இருக்கக்கூடாது’ பகையுடன் புகையும் அமைச்சர்கள்!!

Published : Oct 07, 2018, 11:10 AM IST
’துரோகி பன்னீர் இனியும் பதவியில இருக்கக்கூடாது’ பகையுடன் புகையும் அமைச்சர்கள்!!

சுருக்கம்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை பதவியிலிருந்து நீக்க எடப்பாடி கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் ஆனால் அதற்கு டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல் வருவதற்குப் பதிலாக ரெட் அலர்ட்டே வருவதால் எடப்பாடி கோஷ்டியினர் பயங்கர அப்செட்டில் இருப்பதாகவும் அரசியல் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன் தினம், தினகரன் - பன்னீர் பஞ்சாயத்து பரபரப்படைந்துகொண்டிருந்த அதே நேரத்தில் எடப்பாடி ஆளுநர் மாளிகையில் இருந்தார். அதே நேரம் பொன் ராதாகிருஷ்ணனும் ஆளுநர் மாளிகைக்கு ‘தற்செயலாக’ போனதுபோல் போயிருந்தார். ஆனால் இருவரும் திட்டமிட்டுதான் அங்கே போனதாக சொல்கிறார்கள். நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 5 ஆம்தேதி காலை மத்திய அமைச்சர் பொன்னார், தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்.

அடுத்த அரைமணி நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டார், இருவருக்கும் மாலை நேரத்தில் சந்திக்க நேரம் கொடுத்தார் ஆளுநர். எனவே ஆளுநர் மாளிகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கும்போதே தானும் அங்கே செல்ல வேண்டுமென்ற திட்டத்தோடுதான் முதல்வரும் ஆளுநரிடம் விரைவாக அப்பாயின்ட்மெண்ட் கேட்டதாகத் தெரிகிறது.


 
இறுக்கமான முகத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் சில அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்து ஒரு பட்டியலையும் கொடுத்திருக்கிறார். அந்த லிஸ்டில் பஸ்ட் இருந்தது பன்னீர் தானாம். அது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடந்திருக்கிறது. உடனே ஆளுநரின் ஆலோசனையின் பேரில் அங்கிருந்தே யாரிடமோ முதல்வர் போனில் பேசியதாகவும் சொல்கிறார்கள்.  எதிர்முனையில் பேசியவர் பன்னீரைப் பதவி நீக்கம் செய்தால் ஆட்சி நிலைகுலையும் எடப்பாடி முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்க, அதற்கு மவுனமாக தலையாட்டிவிட்டு அப்செட்டோடுதான் வீடு திரும்பினாராம் எடப்பாடியார்.

அவர் வீட்டுக்கு வந்த பிறகு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி , செங்கோட்டையன் ஆகிய மூவரும் முதல்வரைப் பார்த்தார்களாம். ’நம்முடன் இருந்துகொண்டே துரோகம் செய்கிறவர்களை இனியும் விடக் கூடாது. ஏற்கனவே பாஜக மத்திய அமைச்சர்களிடம் நமது ஊழல் பட்டியலைக் கொடுத்து ரெய்டு செய்யவைத்து அசிங்கப்படுத்தியது ஓபிஎஸ்தான். இனியும் அவரை அமைச்சரவையில் தொடரவிடக் கூடாது என்று பேசியுள்ளார்கள்.

அதற்கு எடப்பாடி,’ பன்னீரை நீக்குறதுக்காகத்தான் ஆளுநரைப் பாக்கவே போனேன். ஆனால் டெல்லி அதுக்கு தயாரா இல்லை. கொஞ்சம் பொறுங்க. ஒரு சரியான சந்தர்ப்பம் வரும்’ என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தாராம்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!