
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி ஆலோசனை நடத்துவற்காக நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
இதில், தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், மக்களிடம் நற்பெயரை வாங்க வேண்டும். அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அதிருப்தி மனப்போக்கால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாமல் இருக்கும் விதமாக பட்ஜெட் அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.