உதயநிதி மீது அமைச்சர் காட்டிய அக்கறை..!! ஸ்டாலின் கூட இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க மாட்டார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2020, 11:48 AM IST
Highlights

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இதை பின்பற்ற வேண்டும், முதலில் அவர் வயதுக்கு ஏற்ப பேச வேண்டும், அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை தரக்குறைவாக பேசுவது என்பது நல்லதல்ல. 

இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இதை பின்பற்ற வேண்டும்,  அவர் வயதுக்கு ஏற்ப பேச வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். 

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் ரூபாய் 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகத்திலேயே தொண்டர்களை மதிக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான், சர்வதேச முதியோர் தினமான இன்று நான் ஒன்றை கூறுகிறேன், யாராக இருந்தாலும் முதியோரை மதிக்க வேண்டும். முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இதை பின்பற்ற வேண்டும், முதலில் அவர் வயதுக்கு ஏற்ப பேச வேண்டும், அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை தரக்குறைவாக பேசுவது என்பது நல்லதல்ல. முதலில் திமுக ஜனநாயக கட்சியை இல்லை, அது ஒரு ஜமீன்தார் கட்சியாக மாறிவிட்டது,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லி ஒருபக்கம் விமர்சனம், ஒரு கூட்டத்தில் அந்த தெரு நாயை பிடித்து வெளியே போடுங்கள் என்று சொல்வதன் மூலம் எந்த அளவுக்கு அந்தக் கட்சி தொண்டர்களை பார்க்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனால் கட்சி தொண்டர்களை மதிக்கின்ற உலகத்தில் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான், அதேபோல் குடும்ப உறுப்பினராக நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம், அதைப் பற்றி நான் ஒன்றும் கூறவில்லை, ஆனால் ஒரே நாளில் 22 லட்சம் பேரை எப்படி உறுப்பினராக சேர்க்க முடியும்? ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்டோர் பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை, மொத்தத்தில் திமுகவின் மானம் கப்பல்  ஏறுகிறது. அனைத்து பெருமையும் பிரசாந்த் கிஷோருக்கே சேரும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

click me!