டாஸ்மாக் நிலவரத்தை அறிவித்த அமைச்சர்... ஹெச்.ராஜா பதிலால் ஆடிப்போன குடிமகன்கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 5:22 PM IST
Highlights
டாஸ்மாக் நிலவரத்தில் ஹெச்.ராஜா சொன்ன கருத்துக்கு, ’’கோயிலையும்தான் மூடியாயிற்று. அதை திறந்த பிறகு கும்பிடலாமா சாமி?’’ என நக்கலடித்துள்ளனர்.
 
டாஸ்மாக் நிலவரத்தில் ஹெச்.ராஜா சொன்ன கருத்துக்கு, ’’கோயிலையும்தான் மூடியாயிற்று. அதை திறந்த பிறகு கும்பிடலாமா சாமி?’’ என நக்கலடித்துள்ளனர்.

மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால்  30 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இந்த நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறாமல் மாவட்ட மேலாளர்கள் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் பொது மேலாளர் கிர்லோஷ் குமாரும் அறிவித்துள்ளார். 

இன்றோடு ஊரடங்கு முடிவுக்கு வரும். டாஸ்மாக் திறக்கப்படலாம் எனக் காத்திருந்த குடிமகன்களுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அமைச்சர் தங்கமணியின் அறிவிப்புக்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ‘’அதற்குப் பிறகும் கடை திறந்திருந்தாலும் மக்களே குடிக்காதீர்கள் என் கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

அதற்குப் பிறகும் கடை திறந்திருந்தாலும் மக்களே குடிக்காதீர்கள் என் கேட்டுக் கொள்கிறேன். https://t.co/MbKOcP1S8r

— H Raja (@HRajaBJP)


அதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ’’கோயிலையும்தான் மூடியாயிற்று. அதை திறந்த பிறகு கும்பிடலாமா சாமி?’’ என நக்கலடித்துள்ளனர்.
click me!