ஒட்டு மொத்த குடும்பத்தையும் தொற்றிய கொரோனா... தீவிர கண்காணிப்பில் அமைச்சர் தங்கமணி..!

Published : Jul 09, 2020, 02:27 PM IST
ஒட்டு மொத்த குடும்பத்தையும் தொற்றிய கொரோனா... தீவிர கண்காணிப்பில் அமைச்சர் தங்கமணி..!

சுருக்கம்

மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.   

மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களில் முக்கியமானவரான தங்கமணிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அதிமுக வட்டாரங்களிலும் அரசு வட்டாரங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் முழுதும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை ஊரடங்கு நேரத்தில் வழங்கினார். அதற்கு தனது மகன் தரணியை தான் பொறுப்பாளராக பார்த்துக் கொள்ளச் செய்தார். படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் தங்கமணியை தொடர்ந்து சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் அவரது மருமகனுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்ததாக அவரின் மகன் தரணிக்கும் தொற்று ஏற்பட அவரும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருக்கிறார். மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் தங்கமணிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அமைச்சர் தங்கமணிக்கு ஏற்கனவே நுரையீரல் சம்பந்தமான சில பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் கொரோனா தொற்று அவரது குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரும் தீவிர கவனம் எடுத்து தங்கமணியின் சிகிச்சை பற்றி விசாரித்திருக்கிறார். மும்பையிலிருந்து சில சிறப்பு மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் தங்கமணி" என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை
எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்