
தமிழக மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி. இவர் கடந்த வாரம் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ்போயலை சந்திக்க டெல்லி சென்றார். ஆனால் மத்திய அமைச்சரின் அனுமதி கிடைக்காமல் திரும்பவந்துவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க தங்கமணி டெல்லி சென்றார்.
நாடாளுமன்ற வாளாகத்தில் கோயலை சந்தித்த தங்கமணி காற்றாலை மின்சாரத்திற்கு பசுமைவழித்தடம் ஏற்படுத்துதல், சுடங்குளம் 3 மட்டும் 4 வது அனுஉலையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்குதல், உதய்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது மத்திய அமைச்சர் கோயல் தமிழக அமைச்சர் தங்கமணியின் கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்