வரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சர்.. அதிமுக தொண்டர்கள் நெகிழ்ச்சி..

Published : Feb 22, 2021, 04:25 PM ISTUpdated : Feb 22, 2021, 04:26 PM IST
வரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சர்.. அதிமுக தொண்டர்கள் நெகிழ்ச்சி..

சுருக்கம்

இந்த நிலையில் கூட்டம் முடிந்த பிறகு அதிமுகவினர்க்கு இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுகவினர் வரிசையாக நின்று பிரியாணியை பெற்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.   

வரிசையில் நின்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ  பிரியாணி வாங்கி சாப்பிட்ட சம்பவம் அதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். 

இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மகளிரணியினர், ஐநூறுக்கும்  மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டம் முடிந்த பிறகு அதிமுகவினர்க்கு இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிமுகவினர் வரிசையாக நின்று பிரியாணியை பெற்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். கட்சி நிர்வாகிகளுக்கும் பிரமுகர்களும் சாப்பிடும் இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ திடீரென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, பாக்குமட்டை தட்டை வாங்கி அதிமுகவினரோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். 

தொடர்ந்து நின்ற படியே பிரியாணியை சாப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் தொண்டர்களிடம் நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா எனவும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் எனவும் கூறினார். அதிமுக தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவை தானும் வாங்கி சாப்பிட்டது தொண்டர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!