கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த கஷ்டி கவசம் படித்ததை உலகத்தில் இங்கே தான் பார்த்து இருப்பீர்கள். இது போன்ற கோமாளி தனம் வேறு எதுவும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
நகர சபை கூட்டத்தில் செந்தில் பாலாஜி
கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் 846 பகுதிகளில் மக்கள் சபை கூட்டம் நடந்து வருகிறது.12 மாதத்தில் ஆறு கூட்டம் நடைபெற்றுள்ளது. கோவைக்கு இன்னும் பல திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். கோவையில் 10 தொகுதியிலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி பார்க்காமல் திட்டங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! நெல்லையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை
அரசியல் கோமாளி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். . வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.எனவே அனைத்து துறையும் பருவ மழைஎதிர்கொள்ள 24 மணி நேரமும் பணி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். மின்வாரியமும் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் சம்பவ இடத்தில் பார்வையிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது தொடர்பான கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர்,
கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த கஷ்டி கவசம் படித்ததை உலகத்தில் இங்கே தான் பார்த்து இருப்பீர்கள். இது பொன்ற கோமாளி தனம் வேறு எதுவும் இருக்காது. . அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அவர். தொலைக்காட்சிகளில் முதலமைச்சர் செய்திக்கு முன்பாக கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இனியும் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதல்வருக்கு இழுக்கு.. திமுகவை சீண்டும் பாஜக..!