அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!

By vinoth kumar  |  First Published Oct 19, 2023, 10:46 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். 


அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் ஸ்டாலினுக்கு பயம் வந்துடுச்சு.. எடப்பாடி பழனிசாமி விளாசல்.!

 

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.  இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மீண்டும் வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜி நலமாக உள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கைபடி செந்தில்பாலாஜி வெளிமருத்துவமனையில் சிகிச்சை பெறதேவையில்லை. மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- குழந்தைகள் பாவம்.. மீண்டும் போர் வேண்டாம்.. காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

click me!