பொது இடங்களுக்கு திமுக தலைவர்களின் பெயரா? உங்க காசுல கட்டி பேர் வைங்க.. கொதிக்கும் அண்ணாமலை..!

By vinoth kumar  |  First Published Oct 19, 2023, 7:22 AM IST

சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.


மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது என  அண்ணாமலை கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில்;- நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என பெயர் வைக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாஜக என்ற சைத்தான்.. இனி செத்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.. திண்டுக்கல் சீனிவாசன்..!

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது. சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை, பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களது பெயர் சூட்ட வேண்டும் என்றும், வளைவுகளுக்கு, அவரது தளபதி பொல்லான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  டிசம்பர் 31ம் தேதி நீங்க மகளிரிடம் காட்டும் லட்சணத்தை தான் பார்த்தோமே.. திமுக பேச தகுதியே இல்லை.. அண்ணாமலை!

click me!