இரவு 12.10 ..! இப்படி ஒரு களைப்பிலும் அமைச்சர் செங்கோட்டையன் விடா முயற்சி...! முக்கிய மீட்டிங் இதுக்கு தான்..!

By thenmozhi gFirst Published Nov 23, 2018, 1:37 PM IST
Highlights

கஜா புயல் வந்ததும் வந்தது...ஒட்டுமொத்த அரசியல் வாதிகளையும் வேலைவாங்கி விட்டது என சற்று கொண்டலாக ஒரு சிலர்  விமர்சனம் செய்தாலும் எப்போதுமே மக்களுக்காக தனித்து நின்று செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இரவு 12.10 ..! இப்படி ஒரு களைப்பிலும் அமைச்சர் செங்கோட்டையன் விடா முயற்சி...! முக்கிய மீட்டிங் இதுக்கு தான்..! 

கஜா புயல் வந்ததும் வந்தது...ஒட்டுமொத்த அரசியல் வாதிகளையும் வேலைவாங்கி விட்டது என சற்று கொண்டலாக ஒரு சிலர்  விமர்சனம் செய்தாலும் எப்போதுமே மக்களுக்காக தனித்து நின்று செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்....இதை தெரிந்துகொள்ள ஈரோடு பக்கம் சென்றாலே தெரியும்..அந்த பகுதியில் எப்படி செல்வ செழிப்போடு...சாலைகள் முதல் பேருந்து நிலையம் வரை பராமரிப்பு வரை...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கஜா புயலில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்புகின்றனர். 

மேலும் அரசும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது...அமைச்சர்கள் தீயாய் வேலை செய்கின்றனர்...அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயகுமார் என பல அமைச்சர்கள் களத்தில் இருந்து தீயாய் வேலை செய்து வருகின்றனர்.....

இதே போன்று சினிமா பிரபலங்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையின் கடந்த ஒரு வருட காலமாகவே மக்கள் பணியில் அயராது  உழைக்க தொடங்கி விட்டார். நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்தாலே புரியும்...இன்று யாரெல்லாம் என்ன செய்ய வேண்டும், நாளை செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

பகல் முழுக்க தீவிரமாக வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் இது போன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு அயராது உழைக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிர்ந்து, அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் மக்கள்.

click me!