அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! வரும் ஏப்ரல் மாதமே முடிந்துவிடுமாம்..!

By ezhil mozhiFirst Published Feb 27, 2019, 6:04 PM IST
Highlights

அரசு பள்ளியில் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

அரசு பள்ளியில் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறார்.

மாணவர்களின் நலன் சார்ந்த விஷயத்திலும் சரி, கல்வித்திறன்  மேம்படுத்துவதிலும் சரி.. பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். இதே போன்று, பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முதற்கொண்டு புதிய பாடதிட்டம், ஆசிரியர்களுக்கும் சீருடை உள்ளிட்ட பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்தவர் அமைச்சர் செங்கோட்டையன் 

மேலும், நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் என அனைத்திலும் மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அமைச்சர் செங்கோட்டையன். இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடைக்காது.
 

click me!