ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம்... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி...

By vinoth kumarFirst Published Dec 23, 2018, 12:20 PM IST
Highlights

அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டியோ அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு தினம் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பிரம்பால் அடித்து மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய்ப்படுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்...

பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டியோ அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு தினம் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் எதுவும் வெளியாகவில்லை. 2 மாணவர்கள் அறையின் பூட்டை உடைத்து உள்ளனர். வினாத்தாளை எடுக்கும் முன் வெளியாகும் முன்பே அவர்கள் பிடிக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் அடிக்காமல் பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் கூறப்படுவது உண்மை கிடையாது. பள்ளி வளாகத்தை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய ஆசிரியர்கள் வற்புறுத்தியது கிடையாது.

அப்படி பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. நமது வீட்டை நாம் சுத்தம் செய்வது போலத் தானே அதுவும்’ என்றார் அவர்.

click me!