ஆண்டவனே நினைத்தாலும் அது நடக்காது: செல்லூர் ராஜூ சவால் விட்டது ஏன்..?

By Vishnu PriyaFirst Published Jan 9, 2020, 5:02 PM IST
Highlights

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அன்பழகன், ‘விலைவாசி ஏற்றம் என்பது பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி’ என்று கூறினார். அது போல காமராஜர் ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆண்டவனே நினைத்தாலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. 
 

*ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக் அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க முகாம்கள் மீது பனிரெண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதில் எண்பது அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் சொல்லியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஈரான் மத தலைவர் அலி கொமேனி ‘இது அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை!’ என்று குறுப்பிட்டுள்ளார். 
-பத்திரிக்கை செய்தி.

*ஓடந்துறை ஊராட்சியில் இருபது ஆண்டுகளில் மக்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் எண்ணூற்று ஐம்பது வீடுகளை கட்டிக் கொடுத்தோம். இந்த ஊராட்சியின் ஆண்டு வருவாயை பனிரெண் லட்சமாக உயர்த்தினேன். நாற்பத்து மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் இந்த ஊராட்சிக்கு வந்து பார்வையிட்டு வாழ்த்தியுள்ளனர். தமிழக அரசின் பாட புத்தகங்களில் இந்த ஊராட்சி இடம்பெறுமளவுக்கு உயர்த்தினேன். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயை எதிர்த்தரப்பினர் கொடுத்தனர், மக்கள் மனம் மாறினர். நான் தோற்றுவிட்டேன். 
-சண்முகம் (சாதனை செய்த ஊராட்சி தலைவர்)

*நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் விளங்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி மையங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். 
-வெங்கய்யா நாயுடு (துணை ஜனாதிபதி)

*குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நான் ஆதரவளிப்பேன். அதே சமயம் மேற்கு வங்கத்தில் அடிச்சுவடு கூட இல்லாத சில கட்சிகள், மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், முழு அடைப்பு போன்ற மலிவான அரசியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. அதற்கு ஒரு நாளும் நான் அனுமதி அளிக்க மாட்டேன். 
- மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

*தூக்கு தண்டனையை நிறைவேற்றிட தயாராக இருக்கும்படி கடந்த மாதம் 16-ம் தேதியன்று என்னிடம் கூறினர். ஆனால் யாருக்கு என தெரிவிக்கவில்லை.  தற்போது, நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற என்னை அழைத்தால் அந்த பணியை செய்வதற்க்கு தயாராக உள்ளேன். இந்த நால்வருக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றம் என்பது, எனக்கும், நிர்பயாவின் பெற்றோர் மற்றும் மற்ற அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும். 
-பவன் ஜலாட் (மீரட் சிறை ஊழியர்)

*ஒரு நாட்டின் கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்நாட்டின் கல்வி நிறுவனங்களை அழிக்க வேண்டும் என்ற சாணக்கியர் கொள்கையை பின்பற்றும் மத்திய அரசு, டில்லி பல்கலைக்கழகத்தில் பயங்கர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அப்பாவி மாணவர்கள் பலர், குண்டர்களால் காயம் அடைந்துள்ளனர். 
- கே.எஸ். அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் பேசினார். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் என்னதான் பேச வேண்டும் என்று வரம்பு உள்ளது. - எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*சட்டசபையில் என்னை பேச விடாமல் அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். என் கருத்து சபையில் முழுமையாக இடம் பெற கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தனர். பேசுவதற்காக ஏராளமான குறிப்புகளை வைத்திருந்தேன். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் கவர்னர் உரையை கிழித்து எறிந்தேன் 
- ஜெ.அன்பழகன் (தி.மு.க. எம்.எல்.ஏ.)

*தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அன்பழகன், ‘விலைவாசி ஏற்றம் என்பது பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி’ என்று கூறினார். அது போல காமராஜர் ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆண்டவனே நினைத்தாலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. 
-செல்லூர் ராஜூ (கூட்டுறவுத் துறை அமைச்சர்)

*தமிழக மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது! பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் பணிகளில் உள்ளனர்! என, சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் உரையில் தெரிவிக்கப்பட்டது அப்பட்டமான பொய். 
-  மீனாட்சி சுந்தரம் (ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர்)

:   விஷ்ணுப்ரியா
 

click me!