திமுகவுக்குதான் பிரசாந்த் கிஷோர் தேவை... எங்களுக்கு மக்கள்தான் ஆலோசகர்கள்... செல்லூர் ராஜூ பொளேர்..!

Published : Aug 22, 2020, 07:38 PM IST
திமுகவுக்குதான் பிரசாந்த் கிஷோர் தேவை... எங்களுக்கு மக்கள்தான் ஆலோசகர்கள்... செல்லூர் ராஜூ பொளேர்..!

சுருக்கம்

தேர்தலுக்காக திமுகவுக்கு யோசனை சொல்ல பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆளை அழைத்து வந்துள்ளார்கள் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும் அதிமுக தயாராகிவருகிறது. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை அதிமுகவில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நடத்திவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டங்களை அமைச்சர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு  அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார்.

 
இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, “திமுகவை போல அல்ல அதிமுக. அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. அதிமுகவில்தான் கிளைச் செயலாளர்கூட துணை முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும். திமுகவில் அதுபோல கிடைக்குமா? மு.க. ஸ்டாலின் மகனோ மகளோ கட்சிக்குள் வர மாட்டார்கள் எனக் கூறினார்கள். இப்போது அந்தக் கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய பூசல் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்காக திமுகவுக்கு யோசனை சொல்ல பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆளை அழைத்து வந்துள்ளார்கள். ஆனால், அதிமுகவுக்கு ஆலோசர்கள் எல்லாம் தேவையே இல்லை. அதிமுகவுக்கு மக்களே ஆலோசனை சொல்ல உள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!