உயர்ந்த பதவியில் உள்ள நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- சேகர்பாபு பதிலடி

By Ajmal Khan  |  First Published Jan 21, 2024, 2:21 PM IST

கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை என தெரிவித்துள்ள சேகர்பாபு, பொய்யான செய்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருத்தத்துக்குரியது என கூறியுள்ளார். 
 


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அன்னதானம் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்ட தகவல் வெளியானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. 

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் சிறப்பு வழிபாட்டிற்கு தடையா.?

தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.  இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள பதிவில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

pic.twitter.com/K83Zn7pNCF

— P.K. Sekar Babu (@PKSekarbabu)

 

நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த சேகர்பாபு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது! என சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

PM Modi Kothandaramar temple: கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

click me!