தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு சேகர்பாபு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயகல்யாணி.
அமைச்சர் தரப்பில் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. தனது விருப்பத்தின் பேரில் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறி இருந்த ஜெயகல்யாணி போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பெங்களூரு போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு செய்திருந்தார். ஜெயகல்யாணி கர்ப்பமாக இருந்த சமயத்தில் பெரும் பரபரப்பு ஒன்றை கிளப்பினார்.
இதனால் தன் தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று இந்த வீடியோவில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, எனது மகளின் திருமணம் என்பது அது ஒரு வலி. அந்த வலியை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவர்களின் வாழ்க்கை பாதையை தேர்வு செய்துவிட்டார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
சமுதாயத்தில் பல்வேறு விசித்திரங்கள் நடக்கும். சமுதாயத்தில் எவையெல்லாம் நடக்கக்கூடாதோ அவையெல்லாம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன். அவைகளில் சில வார்த்தைகளும் கூட.நான் பாதுகாப்பான வாழ்க்கையை மகளுக்கு அமைத்து தரவேண்டும் என தந்தையாக நினைத்தேன். அந்த பாதுகாப்பான வாழ்க்கையை என்னால் அமைத்து தர இயலவில்லை.
இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?
அவர்கள் தேர்வு செய்த வாழ்க்கைப்படி விட்டுவிட்டேன். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. எங்களின் அன்றாட வாழ்க்கையை நாங்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். அவர்களை பற்றி சிந்திக்கப்பதற்கு கூட எங்களுக்கு நேரம் இல்லை. பொதுவெளியில் எங்கும் இதுகுறித்து பேசியது இல்லை." என்று கூறியிருந்தார்.
தற்போது கடந்த 2018ஆம் ஆண்டில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமனம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்