கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்தா..? அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Dec 16, 2022, 12:59 PM IST
Highlights

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக முழுவதும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 

வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் வைகுண்ட ஏகாதசி திருவிழா காலத்தில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களில் அவர்கள் வசதிக்கேற்ப குடிநீர், கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் மற்றும் நெரிசல்  இல்லாமல் தரிசனம் செய்ய ஏதுவாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து கோயில் நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்..! எந்த எந்த இடங்கள் என தெரியுமா..? நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு


சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு

வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் மாடவீதியை சுற்றி வாகனம் நிறுத்த அனுமதி இல்லையென கூறினார். திருக்கோயில்களில் சிறப்பு  தரிசனம் கட்டணம் என்பது படிப்படியாக குறைக்கப்படும் என கூறிய அவர்,பார்த்தசாரதி கோயில் சிறப்பு தரிசனம் கட்டணம் 200ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதே போல நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற கோயிலில் தரிசன கட்டணம் ரத்து செய்வது தொடர்பாக கோயிலின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ 50 உயர்வு..! 9 மாதத்தில் 3வது முறையாக விலை அதிகரிப்பு- அதிர்ச்சியில் பொதுமக்கள்

சிஎம்டிஏவில் அதிரடி நடவடிக்கை

சிஎம்டிஏவில் திட்ட அனுமதி விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியை போல தவறுகள் நடைபெறாமல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எந்த தவறுகளும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கோயம்பேடு மார்கெட்டில் பண்டிகைக் காலங்களில் அமைக்கப்படும் சிறப்பு சந்தைகளில் அதிக தொகை வசூலிக்கும் இடைத்தரகர்கள் கொட்டம்  அடக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூடுகிறது தமிழக சட்டசபை..! ஓபிஎஸ், உதயநிதிக்கு எந்த வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.?

click me!