500 ரூபாய் கூலிக்காக மாரடிப்பவர் தான் வைகைச் செல்வன்... சொந்த கட்சி பேச்சாளரையே அசிங்கப்படுத்திய அமைச்சர்!

Asianet News Tamil  
Published : Jun 25, 2017, 08:50 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
500 ரூபாய் கூலிக்காக மாரடிப்பவர் தான் வைகைச் செல்வன்... சொந்த கட்சி பேச்சாளரையே அசிங்கப்படுத்திய அமைச்சர்!

சுருக்கம்

minister rajendra balaji criticized his party spoke person Vaikaiselvan

500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர், கூலிக்காக மாரடிப்பவர் தான் இந்த வைகைச் செல்வன் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விளாசியுள்ளார்.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் யாரையும், எதையும் லேசில் விடமாட்டார், சில நேரங்களில் கை கலப்பில் கூட ஈடுபடும் அளவிற்கு தரை மட்டத்திற்கு இறங்கக் கூடியவர். 

இன்று சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர்;

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திரபாலாஜியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டார் பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ, “பொன்னுச்சாமி என்பவர் பால் முகவரே அல்ல. அவர் வைத்திருப்பது டூப்ளிகேட் சங்கம். தனியார் பால் நிறுவனங்கள் அவரைப் பணத்தால் விலைக்கு வாங்கி பேச வைக்கின்றன. என்கிறார். 

மேலும் அவர்,தனியார் பால் நிறுவனங்கள் புனே, கிண்டி ஆய்வகங்களுக்குச் சென்று பால் கலப்படச் சோதனையைத் தடுத்து நிறுத்துகின்ற காரியங்களில் இறங்கியிருக்கின்றன. ஆனாலும், காலப்போக்கில் தவறுகள் உறுதிப்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்கிறார். 

தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், “பாலில் ரசாயண கலப்படம் எனச் சொல்லிவிட்டு  நிரூபிக்கத் தவறியதால், தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதவி விலக வேண்டும்.” என்றார். 

இதற்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.  “என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே வைகைச்செல்வனை இப்படிப் பேச வைத்திருக்கிறது. 500 ரூபாய் பணத்துக்காகப் பேசும் கூலிப் பேச்சாளர்தான் இவர், கூலிக்கு மாரடிக்கும் பேச்சாளர் வைகைச் செல்வன் என வெளுத்து வாங்கியிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

இறுதி வடிவம் பெறும் திமுக கூட்டணி.! யாருக்கு எத்தனை சீட்? உத்தேச பட்டியல் இதோ.!
உடைந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி..! பின்னணியில் பாஜக..! இறுதி முடிவெடுத்த ஸ்டாலின்..?