DMK : பணத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர்... மணிகண்டன் வீட்டில் பணத்தை வீசிச் சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

By Thiraviaraj RMFirst Published Dec 10, 2021, 11:49 AM IST
Highlights

அமைச்சர் வந்து விசாரித்தார். பணம் கொடுத்தார். நாங்கள் வாங்க மறுத்து விட்டோம். 

கல்லுரி மாணவன் மணிகண்டன் இறப்பு தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்ததால் வீட்டின் வெளியே பணத்தை வீசி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அங்கு மணிகண்டனை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்றும், அதை திருடிய நபர் மணிகண்டனிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவத்தில் தனது மகன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் எங்களது மகனை போலீசார் தாக்கி கொன்றுவிட்டதாக மணிகண்டனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், எனது மகன் உயிரிழப்பு தொடர்பாக சரியான உண்மை தெரியவில்லை. இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என மணிகண்டனின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், மாணவன் மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான், அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உயிரிழந்த மாணவன் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிகழ்ந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

அப்பொழுது தனது மகனின் உயிரிழப்பிற்கு காவல்துறைதான் காரணம் எங்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என மணிகண்டனின் தாயார் கோரிக்கை வைத்தார். அப்பொழுது அமைச்சர் மணிகண்டனின் தந்தையிடம் நிதியுதவி வழங்கிய நிலையில் அதனைப் பெற்றுக்கொண்டாலும் அங்கிருந்த மணிகண்டனின் உறவினர்கள் தங்களுக்கு பணம் வேண்டாம் அரசு வேலைதான் வேண்டும் என்று ஆவேசமாகினர். அப்பொழுது அமைச்சர் சார்பில், இது தனிப்பட்ட முறையில் செய்யும் நிதியுதவி எனக் கூறப்பட்டது.

தனிப்பட்ட முறையிலெல்லாம் வேண்டாம் வேலைதான் முக்கியம் என வலியுறுத்தி பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தனர். அமைச்சர் அங்கிருந்து கிளம்பிய நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் அந்த பணத்தை மணிகண்டன் வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர். மேலும் தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்வரை இந்த பணத்தை எடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர் மணிகண்டன் குடும்பத்தினர். 

மாணவர் மணிகண்டன் உயிர் போனதற்கு ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து மணிகண்டன் குடும்பத்தினர் ஆவேசக் கேள்வி. pic.twitter.com/feuE5Hk5i2

— அஇஅதிமுக (@ADMKofficial)

 

இதுகுறித்து மணிகண்டனின் தாயார், ‘’ அமைச்சர் வந்து விசாரித்தார். பணம் கொடுத்தார். நாங்கள் வாங்க மறுத்து விட்டோம். வீட்டு வாசலில் வீசிச் சென்றார். எங்களுக்கு பணம் வேண்டாம். நீதி வேண்டும். வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!