விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே பல திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் சர்ச்சையில் வரிசையாக சிக்கிக்கொண்டே வருகிறார்கள். தற்போதைய சோசியல் மீடியா வளர்ச்சியினால், எந்தவொரு சம்பவமும் ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது.
கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புது நகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அப்போது விழாவில் பேசிய அவர், ‘தமிழ்நாடு மு.க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மாதந்தோறும் சரியான நேரத்தில், சரியான எடையில் தரமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக செய்த திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது எடுத்துக்காட்டிற்காக மேடையில் இருந்த முகையூர் ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது நீங்கள் எஸ். சி தானே ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் எழுந்து நின்று ஆமாம் சார் என்று கூறிவிட்டு அமர்ந்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க..சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!
அதேபோல சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய போது, இப்போ பஸ்சில் எப்படி போறீங்க..இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க' என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அமைச்சரின் பொன்முடி பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன் என்று கூறினார்.
அப்போது அங்கிருந்த கிராம மக்கள் எதையும் செய்து தரவில்லை என்று கூச்சலிட அந்த இடமே பரபரப்பாகியது. அப்போது ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, 'இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க, கேட்க வந்துட்டீங்க, உட்காருங்க. நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்' என்று கோபத்தில் பேசினார்.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர்.
அப்போது ஆவேசமடைந்த பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது pic.twitter.com/joAvCzAmZ0
அந்த கிராம மக்கள் அனைவரும் கூச்சலிட, சுருக்கமாக தனது பேச்சை முடித்து கொண்டே கிளம்பினார் அமைச்சர் பொன்முடி. வரிசையாக சர்ச்சையை கிளப்பி வரும் அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொன்முடியின் இந்த பேச்சுக்கு பொதுமக்கள் அனைவரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்