அமைச்சரின் உதவியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. மன்னார்குடியில் பதற்றம்!!

 
Published : Apr 08, 2018, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
அமைச்சரின் உதவியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. மன்னார்குடியில் பதற்றம்!!

சுருக்கம்

Minister PA attack by TTV suporters

மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனின் வீட்டுக்குள் புகுந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அவரை சரமாரியாக அரிவாளாள் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனின் வீடு உள்ளது. இந்நிலையில் இன்ற அதிகாலை மதனின் வீட்டுக்குள் புகுந்த 20 க்கும் மேற்பட்டோர் அவரை  அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த மதன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியுமான சரவணச் செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.

சரவணச் செல்வன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அமைச்சர் காமராஜ் உதவியாளரை வீடு புகுந்து வெட்டிய சம்பவம்  அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!