பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம்... பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்....!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 3, 2021, 7:18 PM IST
Highlights

தமிழகத்தில் 41 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும்,  அதில் ஆவின் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை முதலிடமாக மாற்றவேண்டும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். 
 

பால்வனத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்  பால்வளத்துறை அமைச்சர் நாசர் நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது.  னிக்கிழமை, நந்தனம் ஆவின் இல்லம், தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் 41 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும்,  அதில் ஆவின் இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை முதலிடமாக மாற்றவேண்டும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

மேலும் அக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசியதாவது: தமிழகத்தில் மொத்தம் 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. இதில் 9,399 பால் கூட்டுறவு சங்கங்களில் 4.36 லட்சம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 4 கோடி பால் பொருட்கள் விற்பனையாகிறது. மேலும் 64 அதிநவீன பால் நிலையங்கள் மூலம் 10,700 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுகின்றனர். ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் மாத விற்பனை ரூ.400 கோடி ஆகும். 10 இலட்சம் லிட்டர் பால், பால் பவுடர் மற்றும் வெண்ணையாக உருமாற்றம் செய்யப்படுகிறது.

நாளொன்றுக்கு 30 லட்சம் (74 %) லிட்டர் பாலும், 0.75 ஆயிரம் லிட்டர்பால், பால் பொருட்களாகவும் (2%) , 10 லட்சம் லிட்டர் பால் வெண்ணை மற்றும் பால் பவுடராகவும் (24%) விற்பனையாகிறது. இதில் நிறை கொழுப்பு பால் மக்களிடையே 7 லட்சம் லிட்டர் (27%) அதிகம் சென்றடைகிறது. நிலைபடுத்திய பால் 10 லட்சம் லிட்டர் (38%), சமன்படுத்திய பால் 8 லட்சம் லிட்டர் (31%), இருநிலைசமன்படுத்திய பால் 1 லட்சம் லிட்டர் (4%) என நான்கு வகையான பால் விற்பனை செய்யப்படுகிறது.

பாக்கெட் பால் விற்பனை விநியோகம் நாளொன்றுக்கு 26 லட்சம் லிட்டர் (87%) ஆகவும், உதிரிப் பால் விற்பனை விநியோகம் 4 லட்சம் லிட்டர் (13%) ஆகவும் உள்ளது. 155 மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கு அவசர மலட்டு நீக்க சிகிச்சை அளிப்பதன் மூலம் 16 லட்சம் கால்நடைகள் பயனடைகின்றன. வெளிச்சந்தையில் வாங்கப்படும் கால்நடைத் தீவன விலையை ஒப்பிடுகையில், 25 சதவீதம் குறைத்து கிலோ ரூ.18.50 என குறைந்த விலையில் ஆவின் மூலம் வழங்கப்படும் தீவனத்தால் 4.36 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைகின்றனர்.

தாது உப்புக்கலவையின் வெளிச்சந்தை விலையில் 50% குறைத்து கிலோ ரூ.50 க்கு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் தீவன புல் விதை, கரணைகள் தீவனப் பயிர் விதைகள் விற்பதன் மூலம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பான வகையில் சேவையாற்றி வருகிறது அனைத்து பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் பொதுவான துணை விதிகள் உருவாக்கப்படும் மேலும் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயம் (e-governance) ஆக்கப்படும். 

 பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய இயலும். இதனால் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்படும். அதிநவீன தொழில்நுட்பம் மிக்கதாக ஆவின் நிறுவனத்தை மாற்ற ஆவின் நிறுவன அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஆவினில் செயல்படகூடிய 25 கூட்டுறவு ஒன்றியங்கள் அனைத்தும் தங்களுடைய மனித ஆற்றலின் மூலம் விற்பனையை அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும். பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தை மற்ற துறைகளுக்கு வழிகாட்டியாக மாற்றும் பொறுப்பு அதிகாரிகளிடம் தான் உள்ளது. எனவே ஆவின் துறையை சிறப்பாக செயல்படுத்துவது நம் கையில்தான் உள்ளது  எனத் தெரிவித்தார். 
 

click me!