எடப்பாடி அமைச்சரவையில் விழுந்த முதல் விக்கெட் !! அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு இது தான் காரணமாம் !!

By Selvanayagam PFirst Published Aug 8, 2019, 12:17 AM IST
Highlights

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படாத நிலையில், அமைச்சர் மணிகண்டன் திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் நீக்கத்திற்கு என்ன காரணம் ?  என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

அமைச்சர் மணிகண்டன்  ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கட்டார்.

இதனால் கடுப்பான  அமைச்சர் மணிகண்டன்  தனது துறையின் கீழ் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என அதிருப்தி தெரிவத்திருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை முதலமைச்சர் தரப்பு ரசிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மணிகண்டன் , தமிழக அரசு கேபிள் டிவி துறைக்கு அமைச்சர் நான்தான். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேபிள் டிவி தொழில் செய்து வருபவர், அந்தத் தொழிலில் நல்ல அனுபவம் உடையவர். 
`
அவர்  நடத்தி வரும் அட்சயா கேபிள் டிவி என்ற நிறுவனத்தின் 2 லட்சம் கேபிள் டிவி இணைப்புகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் மாற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் வைத்துள்ள இணைப்புகளை மாற்ற வேண்டும். 

அவரிடம் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்றுவதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடியவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

ஏற்கனவே ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இப்படி கடும் அதிருப்தி மற்றும் அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுக்களை மனதில் வைத்தே மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

click me!