ஆதவாளர்கள் மோதிக்கொண்ட நிலையில் திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசினார்.
ஆதவாளர்கள் மோதிக்கொண்ட நிலையில் திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசினார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற போது அந்த நிகழ்ச்சிக்கு திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருப்பதாகவும் அவருக்கு முரையாக அழைப்பு விடுக்கவில்லை என கூறியும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டிற்கே குவிந்து வீட்டின் முன்பக்கம் நிறுத்தபட்டிருந்த காரின் மீது கற்களை வீசினர். அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்யை வீட்டிற்கே தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..? என்ன காரணம் தெரியுமா.?
இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல் திருச்சி எம்பி சிவாவின் வீடு மீது அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே திருச்சி காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசியுள்ளனர். இதை தடுத்த பெண் காவலர் சாந்தி காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி.. அடுத்தடுத்து அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. வீழ்வாரா? எழுவாரா?
இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி சிவாவை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அமைச்சர் கே. என். நேரு, சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மனம் விட்டு நானும் சிவாவும் பேசினோம். இதுபோல் இனிமேல் நடக்காது. முதல்வர் கேட்டுக்கொண்டதால் சிவாவை சந்தித்தேன். மோதல் சம்பவத்திற்கும் எனக்கும் சமந்தமில்லை என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, நானும் அமைச்சர் நேருவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இதில் நடந்து வைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும். நேருவின் பணியை என்னால் ஆற்றமுடியாது. என் பணியை அவரால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.