கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீடு திரும்பினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அமைச்சர் காமராஜரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டறிந்தனர்.
இதையடுத்து, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தற்போது அளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று அமைச்சர் காமராஜ் 95 சதவீதம் நுரையூரல் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, அமைச்சர் காமராஜ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் சில நாட்கள் வீட்டில் ஓய்வு பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கொரோனால் பாதிப்பால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் 95 நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிர் பிழைத்திருப்பது அவருக்கு மறுபிறவியே என்று தான் சொல்ல வேண்டும்.