"அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்..." - என்ன நடந்தது...?? பரபரப்புத் தகவல்கள்

First Published Mar 21, 2017, 3:48 PM IST
Highlights
minister jayakumar speech in assembly


சமகால வரலாற்றில் அதிமுக வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் பேச்சு சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்த நீக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

பொதுவாக சட்டமன்றம் நடைபெறும் போது உறுப்பினர்களின் பேச்சு அவைக்குறிப்பில் சேர்க்கப்படுவது வழக்கம். அவை மாண்புக்கு ஏற்புடையாத பட்சத்தில்  உரை இருந்திருந்தால் அதனை நீக்க  சபாநாயகருக்கு முழு அதிகாரம் உண்டு…

வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சே  அதிக அளவில் நீக்கப்பட்டிருக்கும்.. ஆனால் இந்த வரலாற்றை மாற்றும்படியான நிகழ்வு தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

2017 -2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதக் கூட்டம்  இன்று நடைபெற்றது. அப்போது எழுந்த  தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பட்ஜெட் அடங்கிய சூட்கேஷை ஜெயலலிதா சமாதி மீது வைத்து வைத்து வணங்கிய நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய ஜெயக்குமார், நிதிநிலை அறிக்கை கசிந்திருந்தால் அதற்கு நானே முழு பொறுப்பு  ஏற்பதாகவும், ஆனால் அப்படி ஒன்று நடக்காததால் பிரச்சனை இல்லை என்று கூறி விளக்கமளித்தார்.

இவ்விவாதத்தின் போது ஸ்டாலினுக்கும்,ஜெயக்குமாருக்கும்  இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் எழுந்த அமைச்சர் செங்கோட்டையன் இருவரது  பேச்சையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு  அவைத் தலைவரிடம்  கோரிக்கை வைத்தார்.

இதனைப் பரிசீலித்த  சபாநாகர் தனபால்  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை அவைக்குறிப்பில்  நீக்க உத்தரவிட்டார்…

சமகால வரலாற்றில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்  ஒருவரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது அக்கட்சியைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

click me!