
சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கொட்டப்படுவது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் இன்று காலை கமல்ஹாசன் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; பார்வையிடலாம். ஆனால் அதுதொடர்பாக ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கினால் ஏற்றுக்கொள்ளலாம். சாம்பல் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குறை மட்டுமே கூறிக் கொண்டிருக்கக் கூடாது. முகத்துவாரங்கள் தூர்வாரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.