
சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்கள், சாம்பல் கொட்டுவதாக கமல் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வெள்ள பாதிப்பு இருப்பதாகவும் கமல் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்ட கமல், மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத அப்பகுதி மக்கள், கமலிடம் தங்களது குறைகளை கூறிவிட்டதால், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கமல் பார்வையிட்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் எனவும் 200-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கமல் விசிட் அடித்தாலே ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பதறி அடிக்கும் நிலை உள்ளதை உணரமுடிகிறது.