ஆட்சியாளர்களை போக்கத்த பசங்க என்று சொல்லும் ஸ்டாலின் தான் போக்கத்தவர்.. விளாசி தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்..!

Published : Sep 16, 2020, 11:13 AM IST
ஆட்சியாளர்களை போக்கத்த பசங்க என்று சொல்லும் ஸ்டாலின் தான் போக்கத்தவர்.. விளாசி தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்..!

சுருக்கம்

பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த படையாட்சியாரின் உருவப் படத்துக்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- திமுக நினைத்திருந்தால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். 17 வருடமாக தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கட்சி திமுக. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தேவை. ஆட்சியாளர்களை போக்கத்த பசங்க என்று சொல்லும் ஸ்டாலின் தான் போக்கத்தவர் என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும், பேசிய அவர் பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன். அறிக்கை மூலம் மட்டுமே பேசும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ்க்கு தயாராகி விட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!