”வாயிற்கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது” - சூசகம் பாடும் ஜெயக்குமார்...!!!

 
Published : Aug 01, 2017, 07:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
”வாயிற்கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது” - சூசகம் பாடும் ஜெயக்குமார்...!!!

சுருக்கம்

Minister Jayakumar said that the gateway is open to all people with a consensus.

ஒருமித்த கருத்தோடு அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என வாயிற்கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லோரும் விரும்புவது கூடி வந்தால் கோடி நன்மை எனவும், நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எழுச்சியான முறையில் நட்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஒருமித்த கருத்தோடு அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என வாயிற்கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், எல்லோரும் விரும்புவது பொல் கூடி வந்தால் கோடி நன்மை எனவும், சுமூகமான தீர்வு எட்டும் என நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும், நாங்கள் எங்கள் முடிவில் தெளிவாகவே உள்ளோம் எனவும், தெரிவித்தார்.

திருப்பூர், மதுரை, திருவண்ணாமலையில் நடைபெற்றது போல் மற்ற மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த ஆலோசிக்கப்பட்டது என ஜெயக்குமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!