
முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் பிடிபடும் மீன்கள் தான் உலகிலேயே சுவையான மீன்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த மே மாதம் 29ம் தொடங்கிய கூட்டத்தொடர், ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, மீன்களை பதப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து பேசினார்.
அப்போது, முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் கிடைக்கும் மீன்கள் தான் உலகிலேயே சுவையான மீன்கள். அத்தகைய சுவை மிகுந்த மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மீன்வளத்துறை மானியத்தின் மீதான விவாதம் கடந்த ஜூன் 1ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.