எம்ஜிஆர், ஜெ., இருக்கும்போது இப்படி பேசிட்டு ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா..? ரஜினியை தெறிக்கவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்

Published : Aug 14, 2018, 02:11 PM ISTUpdated : Sep 09, 2018, 07:32 PM IST
எம்ஜிஆர், ஜெ., இருக்கும்போது இப்படி பேசிட்டு ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா..? ரஜினியை தெறிக்கவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்

சுருக்கம்

கருணாநிதிக்கு திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

கருணாநிதிக்கு திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

கருணாநிதிக்கு திரைத்துறையினர் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி என பேசினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமானது அல்ல. ஆனால் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியுள்ளார். அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதையே அது காட்டுகிறது. 

பகுதிநேர அரசியலிலிருந்து முழுநேர அரசியல்வாதியாக மாற நினைவேந்தல் நிகழ்ச்சியை பயன்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். திமுக தொண்டர்களை கவர்வதற்காக அதிமுகவை விமர்சித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்போது இப்படி பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா? என பகிரங்கமாக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார். 
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!