
ராஜேந்திர பாலாஜி சொன்னது உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடவக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். இதனை மனதில் வைத்துதான் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகமே கொந்தளித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ கண்காட்சி, திருவிடந்தையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது நீங்கள் கருப்பு கொடி காட்டினால், நாங்கள் அவருக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகளைச் சார்ந்துள்ள நாடு என்பதால் குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை பெற்றுத்தருவோருக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையளவுக்கு மத்திய அரசு செயல்படுத்தி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பச்சைக்கொடி காடுடுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு? என்று ஜெயக்குமார், செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
அதிமுக கொடியில் கருப்பு இருக்கு... அதனால் கருப்பு கொடி காட்டுறதுலேயும் தவறு இல்லை என்கிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார். அதற்கும் இதற்கும் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள்? பச்சைக் கொடி என்பது தேசிய கொடியில் உள்ளது. கருப்பு கொடி காட்டுவது என்பது எதிர்கட்சியின் பாங்கு.