அம்மா சொத்துக்கு உரிமை கோரும் சின்னம்மா...!! பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன அமைச்சர்...!!

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2019, 1:34 PM IST
Highlights

. நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது தேர்தல் வந்தாலே திமுகவுக்கும் அதன் தலைவருக்கும் ஜுரம் வந்துவிடும் என்றார் அவர்.
 

தேர்தல் வந்தாலே திமுகவுக்கும் அதன்  தலைவர் ஸ்டாலினுக்கும்  ஜுரம் வந்துவிடும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  விமர்சித்துள்ளார் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார் .  அப்போது சுனாமி நினைவு கல்வெட்டையும் அவர் திறந்து வைத்து ,  பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினர் . 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,   தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவையாற்றி வருகிறது என்றார் ,  மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு முன்னோடி மாநிலமாக இருக்கிறது .  காங்கிரசுடன்  சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் இருந்தது ஆனால் மக்களுக்காக எந்த நல்ல திட்டத்தையும் செய்யவில்லை என்றார். நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது தேர்தல் வந்தாலே திமுகவுக்கும் அதன் தலைவருக்கும் ஜுரம் வந்துவிடும் என்றார் அவர். 

மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமம் போடுவது திமுகதான் என்றார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே சொந்தம் என சசிகலா கூறுகிறாரே என செய்தியாளர் கேட்டதற்கு சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் அது குறித்து பேச முடியாது என்றார் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதே அதிமுகவின்  நோக்கம் எனவும் அவர் கூறினார். 
 

click me!