எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் இமெயில் முடக்கமா...? - அமைச்சர் ஜெயகுமார் மழுப்பல்

 
Published : Jul 21, 2017, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் இமெயில் முடக்கமா...? - அமைச்சர் ஜெயகுமார் மழுப்பல்

சுருக்கம்

minister jayakumar condemns kamal

சென்னை ராயப்பேட்டையில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார், நடிகர் கமல்ஹாசன் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் இமெயில், ஐடி என்றெல்லாம் பேசுவது குழந்தைத்தனமானது என கூறினார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நீக்கப்படவில்லை. எம்எல்ஏக்களாக இருந்தால்தான் அமைச்சராக முடியும். அனைத்து எம்எல்ஏக்களின் மின்னஞ்சல் முகவரி அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் கமலை கண்டு அரசாங்கம் பயப்படவில்லை. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. திட்டமிட்டே இந்த அரசின் மீது களங்கம் கற்பிக்கவும் அவதூறு செய்யவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசு வெளிப்படையானது. இதில் ஊழல் முறைகேடு என்று சொன்னால்கூட இந்த அரசில் சட்டம், நீதித்துறை, நிர்வாகத்துறை பத்திரிகை துறை என நான்கு தூண்கள் உள்ளன. குற்றச்சாட்டு பற்றி நீதித்துறையிடம் திட்டவட்டமாக, ஆணித்தரமாகத் தெரிவிக்கலாம்.

அதை விட்டுவிட்டு இமெயில், ஐடி என்றெல்லாம் பேசுவது குழந்தைத்தனமானது. இப்படிச் செய்வது, போகும் ஊருக்கு வழிதேட முடியாது. கமல், ரசிகர்களை, பொதுமக்களை வேண்டுமென்றே திசைதிருப்பும் செயல் இது.

இப்போது குற்றம்சாட்டும் கமல், அவர் மகள் ஸ்ருதிஹாசன், "டெங்கு காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்த குறும்படம் இன்றும் திரையரங்குகளில்  திரையிடப்பட்டு வருகிறது. வடமாநிலத்தவரும் இங்கு சிகிச்சைபெறும் அளவுக்கு தமிழகம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது, செய்தியாளர்கள் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் இணையதள ஐடி, இமெயில் முடக்கப்பட்டுள்ளதாக கூறி, கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ஜெயகுமார், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என மழுப்பலாகவே பதில் அளித்தார். சில நேரங்களில், அந்த கேள்விகளுக்கு பதில் கூற மறுத்து, கண்டும் காணாதது போல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!