கட்சியில் இருந்து கொண்டே கட்சியை விமர்சிக்காதே...!! அன்வர் ராஜாவை கண்டித்த அமைச்சர் ஜெயக்குமார்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2020, 1:03 PM IST
Highlights

திமுக உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு மகத்தான வெற்றியையும் பெறவில்லை என்றும் , திமுக தேய்கின்ற தேய்பிறை ,  அதிமுக வளர்பிறை என்பதை தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும்   மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

திமுக உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு மகத்தான வெற்றியையும் பெறவில்லை என்றும் , திமுக தேய்கின்ற தேய்பிறை , அதிமுக வளர்பிறை என்பதை தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும்   மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.  சென்னை காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிக்காக பல்வேறு வகையில் உழைத்த பி. எச்.  பாண்டியன் மறைவு மாபெரும் இழப்பு என்று கூறினார். 

அதிமுக எப்போதும் வளர்பிறை,  திமுக தேய்பிறை என்பதுதான் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளனர் என்று கூறிய அவர்,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாகவும், 
அதற்கு கரி பூசும் வகையில் வேலூர் தேர்தல் நடைப்பெற்றது என்றும்  தப்பித்தோம் பிழைத்தோம் என்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 தொடர்ந்து அதிமுக பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது என்று கூறிய அவர்,   மகத்தான வெற்றி என்ற பிரம்மையை திமுக ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றார். அகள பாதாளத்தில் திமுக சென்று கொண்டிருக்கிறது , அதிமுகவிற்கு ஏறுமுகம் திமுக விற்கு எப்போதும்  இறங்கு முகம் தான் என்றும் அவர் தெரிவித்தார். 

தபால் வேலையை பார்க்க தான் தேர்தல் ஆணையரா என்று  கேள்வி எழுப்பிய அவர் ,  அரசியல் தலையீடு இல்லாமல் கடமையை செய்ததால் தான் இந்த அளவிற்கு முடிவுகள் வந்துள்ளதாகவும்,  நாங்கள் பெற்ற வெற்றியை மூடி மறைக்க ஸ்டாலின் எங்களை குறை கூறுகிறார் , இது உண்மை அல்ல எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக முன்னாள் எம்பி. அன்வர் ராஜா தேர்தல் தோல்வி குறித்து தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் , கட்சியில் இருந்துக்கொண்டு கட்சியை  அன்வர் ராஜா விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார்.  
 

click me!