
அமைச்சர் ஜெயகுமார் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்கும் பெண்...! பிளான் பண்ணி ரெக்கார்டிங் போட்ட முழு ஆடியோ விவரம்..!
அ.தி.மு.க. அணிக்கு எதிராக எத்தனையோ சரவெடிகளை கொளுத்திப் போட்டிருக்கிறார் டிடிவி தினகரனின் தளபதி வெற்றிவேல். எம்.பி. ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது. அப்போ எம்.பி.யோட அப்பாவுக்கு என்ன வயசுன்னு முடிவு பண்ணிக்கோங்க!
அந்த குழந்தைக்கு முறைப்படி சேரவேண்டிய சொத்தை பிரிச்சுக் கொடுத்திடுங்க. இல்லேன்னா ரகசியம் உடைபடும், சொல்லிட்டேன் என்று ஒரு பயோலாஜிகல் அணுகுண்டை கொளுத்திப் போட்டிருந்தார்.இந்த நிலையில், வெற்றிவேல் குறிப்பிட்ட அமைச்சரும், சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயாருடன் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் அமைச்சரும், பெண்ணின் தாயாரும் பேசுவதாக அந்த ஆடியோ பதிவாகி உள்ளது. அந்த ஆடியோ உங்களுக்கு உரைநடை வடிவில்...
ஜெயக்குமார்: ஹலோ...
பெ.தாயார்: ம்... சொல்லுங்க...
ஜெயக்குமார்: இப்போ... அன்னைக்கு வந்து பார்த்தீங்க இல்லம்மா... அன்னைக்குதான் வந்து அட்மிட் பண்ணிட்டு போனீங்கல்ல...
பெ.தாயார்: கூட்டிகிட்டு வந்துட்டாங்க... வீட்ல போய் கூட்டிகிட்டு வந்துட்டாங்க... வீட்ல போய் என்னை எல்லாரும் சேர்ந்து
அடிச்சாங்க... எதுக்கு அவர்கிட்ட கூட்டிகிணு போனேன்னு... நான் சொன்னே ஒரு ரெக்கமன்டேஷனுக்காக போனோம்.
ஜெயக்குமார்: ம்ம்...
பெண்ணின் தாயர்: ரெக்கமன்டேஷனுக்கு போன பொண்ணுக்கு புள்ள கொடுத்து அனுப்பிச்சிருக்காரே... நல்லாயிருக்குதா? அப்டி
இப்டின்னு என்னை எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க...
ஜெயக்குமார்: யாருமா?
பெ.தாயார்: எங்க அண்ணன், தங்கச்சி... மாமன்... எல்லாருமே...
ஜெயக்குமார்: ம்ம்... அவங்களுக்கு எப்படி தெரியவந்தது... நீங்கதானே... தானே போய்ட்டு வந்தீங்க...
பெ.தாயார்: .... அங்க விட்டிருந்தேன் என் பொண்ணை...
ஜெயக்குமார்: ஏம்மா நீங்க... ஒரு அம்மான்ற அடிப்படையில நீங்கபோய்ட்டு (இது) பண்ண வேண்டியதுதானேம்மா?
பெ.தாயார்: அதாங்க என் தங்கச்ச வீட்லதான் விட்டிருந்தேன் நானு...
ஜெயக்குமார்: ம்ம்...
பெ. தாயார்: நல்ல பொண்ணுங்களுக்கே கல்யாணம் பண்றதுக்கு அவ்ளோ கொடு.. இவ்ளொ கொடுன்னு கேக்குறாங்க. நீ வந்து
புள்ளை களைச்சி வுட்டுட்ட பிறகு, எந்த மாப்பிள்ளை வருவான் உன் பொண்ணுக்கு...
ஜெயக்குமார்: இப்ப... எடுத்தாச்சா...
பெ.தாயார்: இன்னும் எடுக்கவேயில்லை...
ஜெயக்குமார்: ம்ம்... அப்போ 'இது' பண்ணிட்டாங்களா... என்னம்மா?
பெ. தாயார்: இன்னைக்கு காலையிலே தான் வந்தேன் ஆஸ்பிட்டல்ல இருந்து...
ஜெயக்குமார்: சரி... அதை டாக்டர்கிட்ட சொல்லிட்டு இது பண்ண சொல்லட்டுமா... பண்ண சொல்லிடலாம்... ம்...
பெ. தாயார்: அவங்க என்னான்றாங்க... அவருகிட்ட ஏதாவது கேட்டு வாங்கு... ஒன்னுயில்லாத எப்படி நீ பாட்டுக்கு
எடுத்திட்டீனா... அவரு என்னா செய்யப்போறாரு? சைலண்டா வுட்ருவாரு?
ஜெயக்குமார்: சரி... சரி...
பெ.தாயார்: நாங்க எல்லா வந்து அவங்க வீட்டுக்கு போயி பேசறோம் அவர்கிட்டன்னு அப்படின்றாங்க... அவங்க எல்லாரும்
வந்தாங்கன்னா... பாக்குறதுக்கு இதுவா இருக்கும் இல்லீங்களா?
ஜெயக்குமார்: ஆமா... ஆமா... இப்ப எந்த ஆஸ்பிட்டல்ல...
பெ.தாயார்: இன்னும் ஆஸ்பிட்டல்ல சேக்கவே இல்ல... வீட்லதான் கொண்டுவந்து...
ஜெயக்குமார்: இல்ல இல்ல... மொதல்ல ஆஸ்பிட்டல்ல சேர்த்தீங்கல்லம்மா...
பெ.தாயார்: ஆமா...
ஜெயக்குமார்: அது எந்த ஆஸ்பிட்டலு?
பெ.தாயார்: அது வந்து இங்க ... ... ஆஸ்பிட்டலுங்க...
ஜெயக்குமார்: எங்க இருக்குமா ..... ஆஸ்பிட்டலு?
பெ.தாயார்: அது வந்து இங்க... ... ஆஸ்பிட்டலுங்க...
ஜெயக்குமார்: அதான் எங்க இருக்குமா அது... ... ... அந்த ஆஸ்பிட்டலா அது... ... ... அங்க எத்தனை நாள் இருந்தாங்க..
பெ. தாயார்: என்னங்க...?
ஜெயக்குமார்: அங்க எத்தனை நாள் இருந்தாங்கம்மா...
பெ. தாயார்: காலையில கூட்டிணு போனோம்... அந்த மாதிரின்னு திரும்ப உங்க கிட்ட காசு வாங்கிகிட்டு போனோம் பார்த்தீங்களா?
ஜெயக்குமார்: இல்லம்மா... அன்னிக்கு செக் பண்ணிட்டு அங்கபோய் அட்மிட் பண்ணிட்டீங்கல்ல...
பெ. தாயார்: ம்ம்...
ஜெயக்குமார்: அட்மிட் பண்ணிட்டு எத்தனை நாள் இருந்தாங்க... ... ... ... ஆஸ்பிட்டல்ல...
பெ. தாயார்: அதான் காலையில போய் சாயந்திரம் வீட்டுக்கு கூட்டிகிணு வந்துட்டோம்... திருப்பவும் காலையில கூட்டிக்கிணு வர
சொன்னாங்க...
ஜெயக்குமார்: சரி...
பெ. தாயார்: அவ்ளோதான்...
ஜெயக்குமார்: அப்புறமா வந்து... இல்லல்ல நீங்கதான் வந்து ப்ளட்... இது பண்ணீங்களாமே?
பெ. தாயார்: அதான் காசு இல்லன்னு உங்க கிட்ட வந்து வாங்கிணு வந்தேயில்ல நானு...
ஜெயக்குமார்: ஆமா...
பெ. தாயார்: அப்ப வாங்கிட்டு வந்த பிறகுதான் வீட்ல போயி ஒரே சண்டையாகி... நல்லாயிருக்குற பொண்ணுங்களுக்கே மாப்பிள
கெடக்கிறது கஷ்டமாயிருக்குது... ரெக்கமன்டேஷன் போன இடத்துல இந்த மாதிரியா புள்ளயை உண்டாக்கி கொடுத்துட்டு அனுப்பி
வுட்டிருக்காரு... நல்லாயிருக்குதா... யாரு வந்து கல்யாணம் பண்ணுவாங்க... அப்படின்னு சொல்லி ... ... ... பெரிய பிரச்சனையாயி ... ...
ஜெயக்குமார்: ம்ம்... சரிசரி... இப்போ ... ... ... இப்ப நான் வேணா ஆஸ்பிட்டல்ல சொல்லட்டுமா நானு?
பெ.தாயார்: அவங்க என்னன்றாங்க... நீ எடுத்துட்டா அவரு என்ன செய்ய முடியும்... அவரு வந்து ஏதாவது உதவி செய்யட்டும்...
பொண்ணு கல்யாணத்துக்கு...
ஜெயக்குமார்: நானு என்ன சொல்லறேன்... இப்ப எங்க இருக்கீங்க...?
பெ. தாயார்: இப்போ நானு... ... ... தாங்க இருக்கிறோம்...
ஜெயக்குமார்: சரி மெயின்ரோட்டுக்கு வந்து போன் பண்ணுமா?
பெ.தாயார்: மெயின்ரோட்டுக்கு வந்துட்டு...
ஜெயக்குமார்: போன் பண்ணுங்கம்மா...
பெ.தாயார்: ஏம்மா...?
ஜெயக்குமார்: வந்துட்டு போன் பண்ணுங்கம்மா... நாம மீட் பண்றோம்...
பெ.தாயார்: என்ன விஷயம்... என்னன்னு சொல்லிட்டு வரணுமில்ல நானு...
ஜெயக்குமார்: இல்ல இல்ல வாம்மா நேர்ல பேசிக்கலாம் வா...
பெ.தாயார்: அப்படிங்களா...?
ஜெயக்குமார்: இல்ல இல்ல நீ வா... ஒன்னுல்ல...
........ ........ ........
........ ........ ........
........ ........ ........
அதெல்லாம் வேணாம்... யாருமே வேணாம்... உங்களுக்கு எனக்கு மட்டும் தான் தெரியும்... அன்னிக்கு வந்தீங்க இல்ல...
தனியாதானே வந்தீங்க... அன்னிக்கு
பெ. தாயார்: தனியாதாங்க வந்தேங்க... பிரச்சனை வேறமாதிரி ஆகிப்போயிடுச்சிங்க... ஒன்னுமே சாப்பிடாம... வாந்தி எடுத்துகிட்டு
ஒன்னுமே சாப்பிடாம... ரொம்ப இதுவா இருக்கு... எல்லா வாங்க சேர்ந்து போலாம்... ... ... ... அப்படின்றாங்க... நான்தான் வேணா
வேணாம். அப்படின்னு சொல்லிட்டு.... நாலு பேருக்கு முன்னாடி இதுவாயிடப் போகுதுன்னு...
ஜெயக்குமார்: ம்ம்... ம்...
பெ.தாயார்: நான் கூட்டிக்கிட்டு வந்தா எங்க அண்ணன்கிட்டேயும்... மாமாவிடமும் பேசறீங்களா...
ஜெயக்குமார்: இல்ல இல்ல... அது வேணாமா? நான் என்ன
பெ. தாயார்: ம்ம்...
ஜெயக்குமார்: அன்னைக்கு நீங்க வந்தீங்க இல்ல... அன்னைக்கு வந்து பாத்துட்டுதானே போனீங்க...
பெ.தாயர்: வந்தேன்... அதாங்க அதான் சொல்றேனே... .... .... .... .... கைகூட அடிபட்டிருக்கு... ரொம்ப பிரச்சனையாயிடுச்சு...
ஜெயக்குமார்: அதான் சொல்றேன்ல... நீங்க வாங்க...
பெ.தாயார்: என்னன்னு சொல்லுங்க...
ஜெயக்குமார்: அதான் வாங்க... இல்ல வாமா... நேர்ல பேசிக்கலாம்... ஒன்னும் பிரச்சனை இல்ல... நான்தானே இருக்கேன். அன்னைக்கு
வந்தயில்ல உட்கார்ந்துதானே பேசினே மரியாதை கொடுத்து...
பெ. தாயார்: அய்யோ... அதுக்கு சொல்லலீங்க... இப்போ என்ன சொல்லிட்டு வரணும்றேன் நானு...
ஜெயக்குமார்: இல்ல அங்க எதுவுமே சொல்லாதம்மா... நீங்க வாங்க... வீட்டுக்கு...
பெ. தாயார்: இப்ப எங்க பொண்ணு அங்க இருக்குது...
ஜெயக்குமார்: எங்க...?
பெ. தாயார்: ... ... ... ... இருக்குது.
ஜெயக்குமார்: இங்க வந்துரும்மா இங்க... நம்ம வீட்ல... நான் பேசுறேன்...
பெ.தாயார்: இப்ப என்னன்றாங்க... நாம எல்லாம் போய் பேசலாம்...
ஜெயக்குமார்: அது வேணாம்... எப்படிமா நானு... அவங்க யாருன்னு தெரியாதில்ல எனக்கு.
பெ. தாயார்: ம்ம்...
ஜெயக்குமார்: எனக்கு உங்களத் தெரியும்... அந்தம்மாவை தெரியும்... அதனால நீங்கதானே வரணும்.
பெ.தாயார்: ..... ..... அப்போ போயிருந்தோம் இல்லீங்களா...? அப்போ ரெண்டு நாள் தங்கியிருந்தோம். அப்பகூட வந்து... என் பொண்ணு
கர்ப்பமாயிட்டா... மாத்திர கொடுத்து சரியாப்போயிடுச்சு...
ஜெயக்குமார்: ம்...
பெ.தாயார்: இப்பதான்... இந்த மாதிரி ஒரே இதுவா போயிடுச்சு... அத எடுத்து இது பண்ணவும் முடியமாட்டேங்குது...
ஜெயக்குமார்: சரி... சரி... அதாம்மா நீங்க வாங்க... அன்னிக்கி நீ என்ன பார்க்கதானே வந்தே... நான்தானே வந்து... உங்கிட்ட வந்து... ஒரு
இதுவாத்தானே பேசினேன்...
பெ.தாயார்: எங்க அண்ணனையும், மாமாவை கூட்டிகிணு வரட்டா?
ஜெயக்குமார்: அது தப்புமா? புரியுதா? அதெல்லாம் தப்பு... புரியுதாம்மா?
பெ.தாயார்: அத எடுத்துட்டா அவரு பாட்டுகிணு சைலன்டா ஆகிடுவாருன்னு சொல்றாங்க..
ஜெயக்குமார்: அவங்கள எல்லாம் விடுமா? நீங்க வாம்ம... அன்னைக்கு தனியா தானே வந்தே நீ...
பெ.தாயார்: அன்னைக்கு எப்படி வந்தேன்னா... எல்லாருக்கும் எதுவும் தெரியாது...
ஜெயக்குமார்: நீ சொந்தக்காரங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துரும்மா...
பெ.தாயார்: அதான் என்ன விஷயம்? என்னான்னு சொல்லுங்க...
ஜெயக்குமார்: அது ஒன்னுமில்ல நேர்ல பேசிக்கலாம்... வா. நான் வந்துட்டேன்.. ரோட்டுக்கு வந்துட்டு போன் பண்ணுமா...
பெ. தாயார்: அவங்க என்னான்றாங்க.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டா கூட மாப்பிள்ளை வீட்டில சொல்லி
கலைச்சுவிட்ருவாங்க...
ஜெயக்குமார்: நேர்ல வந்தா நான் பேசுறேன் இல்ல.. அது என்ன பேசணுமோ பேசலாம் வா.ட்ஙக நீ வாம்மா..
பெ.தாயார்: அங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லட்டுங்களா?
ஜெயக்குமார்: ம்... அதெல்லாம் வேணாம்... அதெல்லாம் சொல்லக்கூடாது? நீ வந்து மெயினா வந்து சொந்தக்காரங்க பாக்க வந்துட்டேன்
சொல்லிட்டு போங்க...
பெ. தாயார்: ம்... பார்த்துட்டு அதன் பிறகு சொல்லணுமா?
ஜெயக்குமார்: ஆமா... மொதல்ல நான் பேசுறேன்...
பெ. தாயார்: ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துக்கிட்டு வரட்டுமா--
ஜெயக்கமார்: எதும்மா...
பெ. தாயார்: அந்த ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துட்டு வரட்டுமா...
ஜெயக்குமார்: எடுத்துட்டுவா ஒன்னும் பிரச்சனை யில்லை... அதாம்மா நேர்ல பேசிக்கலாமா
பெ. தாயார்: இப்போ என்னங்க செய்யலாம்... ஒரே பிரச்சனையா இருக்கே..
ஜெயக்குமார்: அத நேர்ல பேசிக்கலாம்... நேர்ல வாம்மா..
பெ. தாயார்: அதான் என்னான்னு சொன்னீங்கன்னா வருவேன்.. தனியா வர யோசனையா இருக்கு
ஜெயக்குமார்: அன்னைக்கு தனியாதானே வந்தே...?
பெ.தாயார்: தனியாதான் வந்தேன்.ங்க.. இப்ப மாமா அண்ணனை கூட்டிகிட்டு வரட்டுமா
ஜெயக்குமார்: இல்ல இல்ல நீயும் உன் பொண்ணும்தானே என்னை பாக்க வந்தீங்க.. அப்புறம் இன்னைக்கு மட்டும் ஏன்? அவங்க
பாட்டுக்கு இருக்ட்டும். கேட்டா... சொந்தக்காரங்க வீட்டுக்கு போறேன் சொல்லிட்டு வாம்மாம நீ..
பெ.தாயார்: அப்படியா...
ஜெயக்குமார்: வா... அப்படி என்ன நீ... நான் உன்கிட்ட சாஃப்டாதானே பேசுறேன்..
பெ. தாயார் : அப்படியில்ல...
ஜெயக்குமார்: பின்ன என்ன... நீங்க வந்தபோது கூட உங்களை உட்கார வெச்சுதானே பேசுனேன்... மரியாதை கொடுத்துதானே பேசினே.ன
பெ. தாயார்: அய்யோ நானா... மரியாதைக்கெல்லாம் நான் சொல்லல நானு...
ஜெயக்குமார்: ஆமா... பின் வாம்மா நீ... சொந்தக்காரங்க வீட்டுக் போறேன் சொல்லிட்டு வாம்மா நீ...
பெ. தாயார்: சரிங்க...
ஜெயக்குமார்: ஆமா.. வா.. கொஞ்சம் டீடெய்லா பேசலாம். வா...
பெ.தாயார்: சரிங்க...
ஜெயக்குமார்: யாரும் வேணாம்... நீ மட்டும வாம்மா
பெ.தாயார்: ஒருத்தரும் வேணாமா?
ஜெயக்குமார்: எவ்வளவு காலமா தெரியும் உன்ன... நீ வாம்மா...
பெ.தாயார்: ஒருத்தர் என்ன சொல்றாங்க... இவரு வீட்டுக்கு போலாம் வாங்கன்னு சொல்றாங்க.. இன்னொரு கும்பல் என்ன
சொல்றாங்க... நம்ம ..... வீட்டுக்குபோகலாம் வாங்கன்னு சொல்றாங்க..
நான்தான் சொன்னேன் ஒன்னும்வேணாம்.. நான் அவட்ரகிட்ட பேசுறேன்.
ஜெயக்குமார்: ஆமா நீ வாம்மா வந்துரும்மா
பெ. தாயார்: அசிங்கப்படுத்தக்கூடாது பெரிய லெவல்ல இருக்காரு...
ஜெயக்குமார்: ஆமா... ஓ.கே. ஓ.கே. வந்துட்டு போன் பண்ணுமா?‘
பெ. தாயார்: சரிங்க...
என்பதோடு இந்த ஆடியோ உரையாடல் முடிவடைகிறது. இந்த ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.