பேசுவது எல்லாம் பொய்.. உண்மை அறியாமல் அறிக்கை விட்டு வருகிறார்..ஓபிஎஸ் க்கு சவுக்கடி கொடுத்த ஐ.பெரியசாமி..

Published : Mar 26, 2022, 07:46 PM ISTUpdated : Mar 26, 2022, 07:47 PM IST
பேசுவது எல்லாம் பொய்.. உண்மை அறியாமல் அறிக்கை விட்டு வருகிறார்..ஓபிஎஸ் க்கு சவுக்கடி கொடுத்த ஐ.பெரியசாமி..

சுருக்கம்

கூட்டுறவு சங்கங்களில் தலைவர் பதவி என்பது கவுரவப் பொறுப்பு மட்டுமே என்றும் அதற்கு சம்பளம் கிடையாது எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உண்மை அறியாமல் அறிக்கை விடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், '' நேற்று எதிர்கட்சித் துணைதலைவர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரத்தை தலைவரிடம் இருந்து பறித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படியும், அதன் துணை விதிகளின் படியும் காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் செயலாளருக்கு தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிக் காலத்தை முடிவு செய்வது என்பது மாநில அரசுக்கு உட்பட்டது என்றும் அதுக்குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைதலைவர் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டு வர அதிகாரம் இல்லை. கூட்டுறவு துறை மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டது என்று கூறுவதெல்லாம் உண்மைக்கு மாறானது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தலைவர் பதவி என்பது ஒரு கெளரவ பதவியாகும் எனவும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் தெரிவித்த அமைச்சர்,  கூட்டுறவுத்துறை மாநில அரசின் பட்டியலில் முழுக்க முழுக்க உள்ளது என்றார்.
எனவே எதிர்க்கட்சி துணைதலைபர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு புறம்பானது. மேலும் ஒரு சில சங்கங்களில் செயலருக்கு அடுத்த பதவியில் இருப்பவரும் சேர்ந்து தான் கையெழுத்து போடுவார்கள். இது தான் கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தின் உள்ள விதிகள் என்று அமைச்சர் விளக்கினார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் கூறியது போல், கூட்டுறவு துறையில் உள்ள தலைவரின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டு காலமாக மாற்ற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும் அல்லது பெரும்பான்மையான மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , எதிர்க் கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்படி ஐந்தாண்டுகள் வகிக்க வேண்டிய பதவியை மூன்றாண்டுகளாக குறைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது இல்லையா? ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? மேற்படி சட்டத்திற்கான ஒப்புதல் பெறப்படாத சூழ்நிலையில், கூட்டுறவு சங்கத் தலைவர்களின் கையெழுத்து போடும் அதிகாரத்தினை குறைக்கும் வகையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தொடக்க கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலைகளில் சங்கத் தலைவரின் கையொப்பம் தனியாகவோ அல்லது சங்கச் செயலாளருடன் கூட்டாகவோ பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் கையொப்பமிட்டு காசோலை அனுப்பினால் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்றும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கூட்டாட்சி தத்துவம் பற்றியும், ஜனநாயகம் குறித்தும் அண்மைக் காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக செயல்படுவது நியாயமா? திமுகவின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!