மக்கள் டென்சனானதால் சுவரேறிக் குதித்த அமைச்சர்...ஸ்டாலின் கிண்டல்

By sathish kFirst Published Nov 18, 2018, 4:18 PM IST
Highlights

கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கியிருக்கும் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அடிப்படை மீட்பு பணிகள் இன்னமும் துவங்காமல் இருப்பதால் பல இடங்களில் மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சுவரேறிக் குதித்து தப்பினார்.
 
பல ஊர்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குக்கூட உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் அரசு நிர்வாகம் மந்தமாக இருப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் புயல்தாக்கியபோதும் சென்னையை புயல்தாக்கியப்போதும் கிடைத்த நிவாரணப்பணிகளில் பத்து சதவிகிதம் கூட தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறி மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நடந்துகொண்டிருந்த சாலை மறியல் குறித்து அறியாமல் அப்பகுதிக்கு விசிட் அடித்திருந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அமைச்சரின் வருகையை அறிந்த மக்கள் அவர் இருக்கும் பகுதியை நோக்கி விரந்தனர். மக்கள் தன்னை நோக்கி கோபமாக வருவதை அறிந்த அமைச்சர் சற்றும் யோசிக்காமல் காரை விட்டு இறங்கி சிலரின் உதவியுடன் ஒரு நெடிய சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடினார்.

இதைக்கேள்விப்பட்ட மு.க.ஸ்டாலின் புயலின் பாதிப்பு குறைவு என்று கூறிவிட்டு உள்ளூர் அமைச்சரே சுவர் ஏறி தப்பி ஓடலாமா என்று கிண்டலடித்துள்ளார். இதே ஓ.எஸ்.மணியன் தான் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகொடுக்கும்போது அழுது நற்பெயர் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!