அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு பல டெண்டர்..! திட்டங்களுக்கு சரியாக நிதியும் ஒதுக்கவில்லை- எ.வ.வேலு குற்றச்சாட்டு

By Ajmal KhanFirst Published Nov 13, 2022, 2:59 PM IST
Highlights

கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் கொடுத்துள்ளார்கள்.ஆனால், தற்பொழுது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கன மழை 

வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்க்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை சீரமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஏ.வே வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, சைதாப்பேட்டை பஜார் சாலையில் பகல் நேரங்களில் அதிகமான அளவு போக்குவரத்து நெரிசல் இருப்பதால் இரவு நேரங்களில் இரண்டு நாட்களில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை வரை உள்ள மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.  

ஆய்வு செய்த அமைச்சர் எ வ வேலு

சென்னையில் மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை.  இருப்பினும் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை  20 நாட்களுக்குள் முடிக்கும் நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது அண்ணா சாலையில் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்கவில்லை என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் சரியான முறையில் நிதியை ஒதுக்கவில்லையென கூறினார்.  கடந்த ஆட்சி  காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணியை கொடுத்தார்கள்.

மழையால் வட சென்னை பாதிப்பு..! களத்தில் இறங்கிய முதலமைச்சர்..! நாளை சீர்காழியில் ஆய்வு

ஒருவருக்கு ஒரு பணி

ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை  மட்டுமே வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எனவே தற்பொழுது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். தற்பொழுது பணிகள் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடங்களை கண்டறிந்து பணிகளை முடுக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.  மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்த பின் அந்த சாலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்  என்று கூறினார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பா..? புதிய புயல் சின்னம் உருவாகிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

click me!