
தமிழகத்தில் மழை தீவிரம்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது இதன் காரணமாக வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது வட உள் தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்ச்சியாக நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, கடலூர், சீர்காழ் உள்ளிட்ட இடங்களில் கன மழையானது பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழில் பொறியியல் கல்வி 12 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம்..! அமித்ஷாவிற்கு பதில் அளித்த பொன்முடி
இதனிடையே சென்னையில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மழைநீரை அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். வடசென்னை பகுதியில் உள்ள மண்டலம் 6ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொசுவலை வழங்கினார். தொடர்ந்து ஓட்டேரி நல்லா பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியை பார்வையிட்ட முதலமைச்சர் மழை நீரை அகற்றும் பணியையும் துரிதப்படுத்தினார். இதனை தொடர்ந்து பல்லவன் சாலை டான்பாஸ்கோ பள்ளி அருகில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்ட முதலமைச்சர், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையில் சென்னை மாநகராட்சியும்,தமிழக அரசும் குடிநீர் வடிகால் வாரியமும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைவரும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட உள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழில் பொறியியல் கல்வி 12 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம்..! அமித்ஷாவிற்கு பதில் அளித்த பொன்முடி