அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை... மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்..!

Published : Oct 31, 2020, 02:07 PM IST
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை... மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்..!

சுருக்கம்

மருத்துவமனை தரப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சரின் 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை தரப்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சரின் 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சரின் முக்கிய உடல் உறுப்புகள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!