இனிமேல்தான் அதிரடி ஆரம்பம்... தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்க..!! அடித்து நொறுக்கப்போகுதுங்கோ..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 31, 2020, 1:45 PM IST
Highlights

திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு  மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி பதிவாகக் கூடும்.

.கடந்த 24 மணி நேரத்தில் விரகனூர் அணை (மதுரை) மதுரை ISRO (மதுரை) தலா 10 சென்டிமீட்டர் மழையும், மதுரை விமான நிலையம் (மதுரை) 8 சென்டிமீட்டர் மழையும்,  திருமங்கலம் (மதுரை) வாலிநோக்கம் (ராமநாதபுரம்) வத்திராயிருப்பு (விருதுநகர்) மதுரை தெற்கு (மதுரை) தலா 7 சென்டி மீட்டர் மழையும், விளாத்திகுளம் (தூத்துக்குடி) கோவில்பட்டி (தூத்துக்குடி) 5 சென்டி மீட்டர் மழையும், சாத்தூர் (விருதுநகர்) தலா 4 சென்டிமீட்டர் மழையும், பிளவக்கல் (விருதுநகர்) சோழவந்தான் (மதுரை) எட்டயபுரம் (தூத்துக்குடி) சித்தம் பட்டி (மதுரை) தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
 

click me!