பாபநாசம் தொகுதி மக்களின் பாசத்தளபதி.. எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் அரசு பணியை உதறி அரசியலுக்கு வந்த கதை..!

By vinoth kumarFirst Published Nov 1, 2020, 9:26 AM IST
Highlights

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அத்தொகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அத்தொகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மீது கொண்ட பற்று காரணமாக  அதிமுகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார். இதனையடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட துரைக்கண்ணு அடுத்தடுத்து 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்து அன்பை பெற்றார். 

இதையடுத்து 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மிக முக்கியத் துறையான வேளாண்மைத் துறையை ஜெயலலிதா துரைக்கண்ணுவுக்கு வழங்கினார். தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அமைச்சராக இருந்தாலும் ஒன்றியச்செயலாளராக இருந்த போது மக்களிடமும், கட்சிக்காரர்களிடம் எப்படிப் பழகினாரோ அதே போல் தனது இறுதிமூச்சு வரை அனைவரிடத்திலும் அன்புக் காட்டி வந்தார்.

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், நான்கு மகள்களும் உள்ளனர். மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் ஐய்யப்பன் என்கிற சண்முகபிரபு அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!