'செருப்பை கழட்டுடா' விவகாரம்..! சிறுவனை பெற்றோருடன் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்..!

Published : Feb 07, 2020, 01:35 PM IST
'செருப்பை கழட்டுடா' விவகாரம்..! சிறுவனை பெற்றோருடன் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்..!

சுருக்கம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழட்ட கூறிய சிறுவனனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும்  முதுமலையில் யானைகள் நல்வாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், கட்சியினர் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

அப்போது அமைச்சர் சீனிவாசனின் கால் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். "டேய் வாடா.. செருப்பை கழட்டுடா" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிருக்கிறான். இதை அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன. இந்த காட்சிகள் வைரலாகி அனைவரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. எனினும் தனது செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என நேற்றே அமைச்சர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழட்ட கூறிய சிறுவனனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். உதகையில் சிறுவனையும், சிறுவனனின் பெற்றோரையும் சந்தித்த அமைச்சர் அவர்களிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அதில் எந்தவித உள்நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி..! சரக்கு விலை தாறுமாறு உயர்வு..! இன்று அமலாகிறது..!

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!